மீண்டும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை மையம்
தமிழகத்தில் மீண்டும் கனமழை வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் கனமழை பெய்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. ஆங்காங்கே சிறு தூறல் விழுந்தாலும், மிதமான வெயிலே இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை மையம் எச்சரித்துள்ளது. வருகிற 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.