1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2019 (09:31 IST)

வேலூரில் கனமழை: பள்ளி கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை!

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் விடுமுறை அறிவித்துள்ளார். 


 
தமிழகத்திற்கு பொதுவாக வடகிழக்கு பருவமழை என்றாலும், இந்த முறை தென்மேற்கு பருவமழையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து அணைகள் நிரம்பி வருகிறது. நேற்று இரவு பெய்யத்தொடங்கிய மழை காலை வரை விடாமல் பெய்து வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தின்  22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
 
அந்தவகையில் சென்னை, திருவள்ளூர், வேலூர் ,கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழையும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான  தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும்  பெய்து வருகிறது. இதில் வேலூர் மாவட்டங்ககளில் பரவலாக இரவு முழுவதும் கனமழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார்.