நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்த நிலையில் சற்றுமுன் நெல்லை மாவட்டத்தில் இன்று சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும் என்றும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது .மேலும் நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva