Daily Horoscope
✕

சென்னையின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

Written By siva
Updated: வியாழன், 22 அக்டோபர் 2020 (16:37 IST)
கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டதன் காரணமாக மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது 
 
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதோடு இடி மின்னலும் ஏற்பட்டுள்ளதால் பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னையின் முக்கிய பகுதிகளான வளசரவாக்கம் தாம்பரம் மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதாகவும் தேனாம்பேட்டை சைதாப்பேட்டை கிண்டி வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

தீபாவளி முகூர்த்த வர்த்தகம்: 81,000-க்கு கீழ் சரிந்து முடிந்த சென்செக்ஸ், 25,000-க்கு கீழ் நிஃப்டி!

புத்தக முறைகேட்டை அம்பலப்படுத்திய பெருமாள் முருகனே நூல் பரிந்துரை குழுவில் இருந்தவர்தான்: கோவி. செழியன்

தமிழ்நாடு, புதுச்சேரி யில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்திய தொழிலதிபர்களுடன் தீபாவளி கொண்டாடிய டொனால்ட் டிரம்ப்! யார் யார் பங்கேற்பு..

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! உடனே விண்ணப்பிக்கவும்..

அடுத்த கட்டுரையில்
Show comments