வங்க கடலில் உருவானது புதிய காற்றழுத்த பகுதி! – 4 மாநிலங்களுக்கு கனமழை அலர்ட்!
கடந்த சில மாதங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பொழிந்து வந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை பொழிந்து வந்த நிலையில் முந்தைய சில வாரங்களில் வங்க கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனால் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநிலங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.