செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 மே 2023 (15:18 IST)

இன்னும் சில மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை..! வானிலை எச்சரிக்கை..!

இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்கிழக்கு வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதை அடுத்து இன்று 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருமாறு: இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
 
Edited by Mahendran