Daily Horoscope
✕

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை: வானிலை அறிக்கை..!

Written By siva
Updated: திங்கள், 3 ஜூலை 2023 (07:16 IST)
சென்னை உள்பட தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே சென்னையில் இன்று அதிகாலை லேசான மழை பெய்து வரும் நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில்  கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக  நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருப்பதை அடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
சென்னையில் தற்போது விட்டு விட்டு மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்று மாலைக்குள் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவையிலும் இன்று மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
Edited by siva

எல்லாம் காட்டு

நாளை முதல் ரேஷன் கடையில் தீபாவளி தொகுப்பு!.. என்னென்ன பொருட்கள்?...

நாளை முதல் தீபாவளி தொகுப்பு மளிகை பொருட்கள்.. ரூ.200க்கு 10 வகை பொருட்கள்...

திமுக தொண்டனின் கால் நகம் கூட பயப்படாது - முக ஸ்டாலின் கோபம்..

மிருகக்காட்சிச்சாலைக்கு கணவருடன் சென்ற 18 வயது பெண் மாயம்.. 20 நாட்களுக்கு பின் நடந்த ஆச்சரியம்...

ஏஐ டெக்னாலஜியால் 90 சதவீத மக்கள் வேலை இழந்துவிடுவார்களா? ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments