Daily Horoscope
✕

இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Written By Siva
Updated: சனி, 9 டிசம்பர் 2023 (07:27 IST)
இன்று 18 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கீழடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும்  பரவலாக கனமழை பெய்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் புயல் கரையை கடந்த பிறகும் வடகிழக்கு பருவமழை காரணமாக சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு என்றும் கூறப்பட்டுள்ளது

Edited by Siva

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments