வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு: நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதை அடுத்து, நாளை ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நாளை ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,
கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, மேற்கண்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.