வலுவடைந்தது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி., 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!
வங்கக் கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுவடைய காலதாமதம் ஆகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்த நிலையில், தற்போது அது வலுவடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக சற்றுமுன் மாறியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளுக்கு நோக்கி நகரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள ஆறு மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என்று, இந்த மாவட்டங்களில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Mahendran