செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 மே 2023 (08:00 IST)

இன்றும் தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் நேற்று சென்னை உள்பட பல பகுதிகளில் 100 மற்றும் 105 டிகிரி வரை அதிகமான வெயில் அடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இன்று இயல்பை விட மூன்று டிகிரி வரை வெப்பம் உயரும் என்றும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் அதாவது மே 16, 17 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

மழை ஆறுதலை கொடுத்தாலும் தமிழகம் புதுவையில் பல இடங்களில் இயல்பான வெப்பநிலையில் இருந்து இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமான வெப்பம் இருக்க கூடும் என்றும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருப்பதால் பொதுமக்களுக்கு அசவுரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச நிலை 40 முதல் 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது

Edited by Siva