புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2017 (18:14 IST)

போராட்டம் நடத்தி வரும் செவிலியர்கள் பணிநீக்கமா? சுகாதாரத்துறை அதிரடி

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை டி.எம்.எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். இந்த போராட்டத்தை முறியடிக்க அரசும் காவல்துறையினர்களும் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களிடம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செவிலியர்கள் பணிக்கு வராததால் அத்தியாவசிய மருத்துவ பணிகள் பாதிக்கபட்டுள்ளதாகவும், அனுமதியின்றி பணிக்கு வராமல் அத்தியாவசிய சேவைப் பணியை புறக்கணித்தது ஏன்? என்றும் சுகாதாரத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் இந்த காரணத்திற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை பணியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்று சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு தகுந்த பதில் அளிக்காத செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.