செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2017 (21:19 IST)

தொண்டர்கள் பயம்: ரூ.3 கோடிக்கு இன்ஷூரன்ஸ்: காங்கிரஸ் பரிதாப நிலை!!

தொண்டர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என அஞ்சி குஜராத் மாநில காங்கிரஸ் தலைமையகத்திற்கு ரூ.3 கோடி ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் போடப்பட்டுள்ளதாம்.

 
குஜராத் சட்டபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்தது. அதே நேரம் பட்டேல் இன மக்களின் போராட்டக் குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள், போராட்டங்கள் என காங்கிரஸ் அலுவலகங்களின் மீது கல்வீச்சும் நடந்துவருகின்றன. இதனால், காங்கிரஸ் மாநில தலைமையகத்தை ரூ.3 கோடிக்கு இன்ஷூரன்ஸ் செய்துள்ளனர்.
 
ஏற்கனவே இதே போன்று 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் அறிவிப்பின் போதும் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
போலீஸ் பாதுகாப்பு, தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பாதுகாப்பு, தொண்டர்கள் படை மேலும் சிசிடிவி கேமராக்களையும் பொருத்தி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனராம்.