Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படித்தான் கூவ வேண்டும் : கமல்ஹாசனுக்காக தயாரான துண்டு பிரசுரம்

Updated: வெள்ளி, 13 ஜூலை 2018 (08:21 IST)
நேற்று தொண்டர்கள் முன் கமல்ஹாசன் பேசிய போது அவரை புகழ்ந்து பாட தொண்டர்களுக்கு கொடுக்கப்பட்ட துண்டு பிரசுரத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றினார். அப்போது அங்கு ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் கூடியிருந்தனர்.
 
அப்போது, மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகளை அவர் அறிவித்தார். அப்போது, அவரை வாழ்த்தி எப்படி கோஷம் போட வேண்டும் என துண்டு பிரசுரங்கள் தயார் செய்யப்பட்டு தொண்டர்களிடம் நிர்வாகிகள் கொடுத்திருந்தனர்.
 
ஒருவர் இப்படி சொல்ல அதைக்கேட்டு மற்றவர்கள் எப்படி சேர்ந்து சொல்ல வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆழ்வார்பேட்டை ஆண்டவரே ஆள வாங்க.. ஆள வாங்க என மொத்தம் 8 கோஷங்கள் அதில் அச்சடிக்கப்பட்டிருந்தது.
 
இந்த துண்டு பிரசுரங்களை காட்டி கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், இதுபற்றி இங்கே பேச வேண்டாம். வேறொரு இடத்தில் பேசுவோம் எனக்கூறிவிட்டு கமல் அங்கிருந்து சென்று விட்டார்.

இது நிர்வாகிகள் செய்த செயல்தான் என்றாலும், இதற்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் கமல்ஹாசனே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

25 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி நபர்.. அதில் ஒரு பெண் பாஜக எம்.எல்.ஏவின் மகள்...

வினாடி வினா போட்டியில் சாவர்க்கர் கேள்வி கேட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை..

மம்தா பானர்ஜி மீது கல்வீச்சு, சேறு வீச்சு.. இறந்த தொண்டரின் வீட்டுக்கு சென்றபோது நடந்த சம்பவம்...

குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள்.. கைரேகை பதிவு செய்ய இன்றே கடைசி நாள்..

விஜய் டிவியில் பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி... நடுவர்கள் ஓவியா, ஆரி, ராஜூ..

அடுத்த கட்டுரையில்
Show comments