செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (11:27 IST)

ஹெச். ராஜா ஒரு பைத்தியகாரர்... குஷ்புவின் டுவிட்டுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை ! !

ஹெச்,ராஜா ஒரு பைத்தியகாரர் என நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதற்கு , நடிகை காயத்ரி ரகுராம் ’கூ’ என்று தனது டுவிட்டர் பதிவிட்டு குஷ்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக தேசிய செயலராள ஹெச்.ராஜா, மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்து தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
 
இந்நிலையில், ஹெச்.ராஜாவின் கருத்துக்கு நடிகை குஷ்பு தனது டுவுட்டர் பக்கத்தில்,  எச்சு ராஜா ஒரு பைத்தியம்... மற்ற யாரும் அவர் பேசுவது வழியில் பேசமாட்டார்கள்... பாஜகவில் இருந்து ஒருவர் வந்து அவரை புகலிடத்துக்கு கொண்டு செல்கிறா என பதிவிட்டிருந்தார்.
 
இதற்கு ,நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில், ’கூ’ குஷ்பு நீங்கள் மற்றவர்களை பேர் சொல்லி அழைக்க முடியும். உங்கள் வாழ்க்கையில்  மற்ற பொய்களில் இருந்து வெளிவரப்போகிறீர்கள்.உங்கள் பொய்களை நான் பட்டியல் இடட்டுமா. இந்துகளை வெறுக்கிறீகள். பொய்யர்களான உங்களுக்கும் காங்கிரஸுக்கும் புகலிடம் இல்லை என  பதிவிட்டுள்ளார்.