1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 14 டிசம்பர் 2019 (14:07 IST)

”டாஸ்மாக்கை குற்றம் சொல்லாதீங்க”.. பொங்கிய குஷ்பு

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு டாஸ்மார்க்கையும் சினிமாவையும் குற்றம் சாட்டாதீர்கள் என குஷ்பு கூறியுள்ளார்.

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, குற்றவாளிகள் 4 பேரை காவல்துறை என்கவுண்ட்டர் செய்தனர்.

இந்த சம்பவத்தை நாட்டில் பல பெண்கள் கொண்டாடி வந்தனர். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்களுக்கு என்கவுண்ட்டர் தான் சரியான தண்டனை எனவும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். மேலும் பல வருடங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சினிமாவும் பங்கு வகிக்கிறது என குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய காங்கிரஸை சேர்ந்த குஷ்பு, “பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சினிமாவையும் டாஸ்மாக்கையும் மட்டும் குற்றம் சாட்டாதீர்கள், தவறாக நடந்துகொள்ள முயற்சிப்பவர்களை துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.