1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 ஜூன் 2023 (08:38 IST)

இன்னும் பல ரயில் விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உள்ளது: ஹெச் ராஜா அதிர்ச்சி தகவல்..!

H Raja
ஒடிசா ரயில் விபத்து போல நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இன்னும் பல ரயில் விபத்துக்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக ஹெச் ராஜா கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஹெச் ராஜா ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று பிரதமரை நோக்கி கூறுபவர்கள் கள்ளச்சாராயம் விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லவில்லை என்பது ஏன் என்ற கேள்வி எழுப்பினார். 
 
மேலும் ஓடிஸா ரயில் விபத்தில் சதி நடந்து இருப்பதாகவும் ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ரயில் விபத்து ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறிய அவர் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நக்சலைட்டுகள் இன்னும் நிறைய ரயில் விபத்து போன்ற சதி வேலைகளை செய்ய வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 மேலும் அனிதா என்ற மாணவி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட போது நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன ஸ்டாலின், தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்த வலியுறுத்தி சிறுமி தற்கொலை செய்து கொண்ட போது டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் என ஏன் கூறவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
Edited by Siva