திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 7 ஜூன் 2023 (16:44 IST)

கே.என்.நேருவை அறநிலையத்துறை அமைச்சராக்க வேண்டும்: ஹெச் ராஜா கோரிக்கை

H Raja
கே என் நேருவை அறநிலையத்துறை அமைச்சராக வேண்டும் என பாஜக பிரமுகர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக சேகர்பாபு இருந்து வருகிறார் என்பதும் அவரது செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருப்பதாக முதல்வரே பல சமயங்களில் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சேகர் பாபு குறித்து அவ்வப்போது பாஜக பிரமுகர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் சற்றுமுன் பாஜக பிரமுகர் ஹெச் ராஜா, ‘சேகர் பாபு அறநிலை துறை அமைச்சராக தொடரக்கூடாது என்று தெரிவித்துள்ளார். 
 
அறநிலையத்துறை அமைச்சராக கே.என்.நேருவை நியமனம் செய்யலாம் என்றும் அவர் நல்லவர், வைஷ்ணவர், கடவுளுக்கு துரோகம் செய்ய மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran