செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (09:52 IST)

ஹைகோர்டாவது ம...றாவது, காவல்துறை ஒரு ஊழல்துறை - எகிறிய எச்.ராஜா; பம்மிய போலீஸ்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல் துறையையும், நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிட்டத்தட்ட தினந்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
 
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டு வருகிறது.
பாஜகவினர் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதி கேட்டுள்ளார். இதனால் பிரச்சனை ஏற்படும் என்பதற்காக போலீஸ் இந்த கூட்டத்திற்கு மேடை அமைக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  ஹைகோர்ட்டின் உத்தரவுப்படி தான் நடக்கிறோம் என போலீஸார் கூறினர். ஹைகோர்ட்டாவது மயிராவது, காவல்துறை ஒரு ஊழல்துறை, டி.ஜி.பி வீட்ல ரெய்டு நடக்குது நீங்கெல்லாம் யூனிபார்ம கலட்டிட்டு போங்க, அங்க புழல் சிறைல முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு கலர் டிவி, சகல வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. போலீசுக்கு வெட்கமில்லயா? முஸ்லீம், குறிஸ்தவன் தர மாதிரி நானும் உங்களுக்கு லஞ்சம் தரேன். எங்களுக்கு மேடை போட அனுமதி கொடுங்க என கண்டமேனிக்கு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசினார்.
தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்களை சுட்டுத்தள்ளிய போலீஸார், காவல் துறையையும் நீதிமன்றத்தையும் இவ்வளவு கீழ்தரமாக விமர்சித்த எச்.ராஜாவை கைது செய்யவில்லை. மாறாக அவரை சமாதானம் மட்டுமே செய்துகொண்டிருந்தனர். எஸ்.வி.சேகர், எச்.ராஜா மீதெல்லாம் பாயாத சட்டம் உரிமைக்காக போராடும் மக்களிடம் மட்டுமே உடனடியாக பாயும்.
 
எச்.ராஜாவின் இந்த கீழ்த்தரமான, மதக்கலவரத்தை தூண்டும் பேச்சு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.