1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 12 மார்ச் 2020 (14:03 IST)

ஏழுமலையான் கறுப்புப் பணம் வைத்துள்ளதாக கூறிய சுகிசிவத்துக்கு ஹெச் ராஜா கண்டனம் !

ஏழுமலையான் கறுப்புப் பணம் வைத்துள்ளதாக கூறிய சுகிசிவம் மீது ஹெச் ராஜா கண்டனம் !

சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் ரூ. 4000 கோடி கறுப்புப் பணத்தை  வைத்துள்ளதாக சுகிசிவம் பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில்,    பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா சுகிசிவம் பேச்சுக்கு விமர்சனம் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில், இவர் தொடர்ந்து ஈவான்ஞ்சலிஸ்ட்க்களின் குரலாக ஒலித்து வருகிறார். இந்துக்கள் இவரை புரிந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

'ஏழுமலையானுக்கு பக்தர்கள் இடும் காணிக்கையை ஏழுமலையான் 4000 கோடி கறுப்புப் பணம் வைத்துள்ளதாக சுகி சிவம் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர் ஏன் தசமபாகம் பற்றி பேசுவதில்லை. இவர் தொடர்ந்து ஈவான்ஞ்சலிஸ்ட்க்களின் குரலாக ஒலித்து வருகிறார். இந்துக்கள் இவரை புரிந்து கொள்ள வேண்டும்' என பதிவிட்டு,ஸ்டாலின் மற்றும் சில பிரபலங்களுடன் சுகிசிவம் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளா ஹெச்.ராஜா.