1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (16:34 IST)

எம்பி சீட் கிடைத்த ஜோரில் பாஜகவுக்கு தாவும் ஜிகே வாசன்??

பாஜக தயவால் நான் மாநிலங்களவை எம்பி பதவிவை பெறவில்லை என ஜி.கே.வாசன் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
 
ராஜ்யசபாவில் காலியாகும் எம்.பி பதவிகளுக்கான வேட்பாளர்களை திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ளது. திமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சியிலிருந்து யாரும் இல்லாமல் மூவரும் திமுக உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  
 
அதிமுகவில் இருவருக்கும் அதாவது தம்பிதுரை, கே.பி.முனுசாமி, கூட்டணி கட்சியான தமாகாவில் ஜி.கே.வாசனுக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாளாக எம்.பி சீட் கேட்டு வந்த தேமுதிகவுக்கு சீட் கொடுக்காதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும், ஜி.கே.வாசனுக்கு சீட் கிடைத்தது அவர் மோடியை சந்தித்துவிட்டு வந்ததால் தான் எனவும், விரைவில் அவர் பாஜகவில் தனது கட்சியை இணைத்துக்கொள்வார் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இவற்றிற்கு தற்போது பதிலளித்துள்ளார் ஜி.கே.வாசன்.
 
அவர் கூறியதாவது, நான் மாநிலங்களவை எம்பி பதவியை பெறுவதற்கு டெல்லியில் உள்ள பாஜக உதவி செய்ததாக சிலர் சொல்கிறார்கள், அதில் உண்மை இல்லை. பாஜக தயவால் நான் மாநிலங்களவை எம்பி பதவிவை பெறவில்லை. அதேபோல சிலர் நான் பாஜவில் சேர்ந்து விடுவேன் என்று வதந்தியை பரப்பி வருகிறார்கள். அவர்களது பகல் கனவு என்றும் பலிக்காது என தன் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.