செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (15:17 IST)

சபரிமலையின் தந்திரியாக பாதிரியார் பிரான்கோ மூலக்கல் –குருமூர்த்தி சர்ச்சை டுவீட்

சபரிமலை விவகாரம் பல பரபரப்பான சர்ச்சைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிறகு தற்போதுதான் அடங்கியுள்ளது. இந்நிலையில் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஒரு சர்ச்சையான கருத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

செப்டம்பர் 28 அன்று  தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் குழு அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்லலாம் என்ற தீர்ப்பை அறிவித்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த ஆதரவு இருந்த போதிலும் இந்து அமைப்புகளும் வலதுசாரி இயக்கங்களும் இந்த தீர்ப்புக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.

ஐப்பசி மாத சிறப்பு வழிபாட்டிற்காக நடை திறக்கப்பட்டபோதும் ஆர்ப்பாட்டக்காரர்களின் தீவிர ஆர்ப்பாட்டத்தால் ஒரு பெண் கூட கோயிலுனுள் சென்று வழிபடாமல் நடை சாத்தப்பட்டது. சபரிமலை விவகாரத்தில் கடந்த சில நாட்களாக அமைதியான சூழ்நிலை வருகிறது. இந்நிலையில் தற்போது துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தனது டிவிட்டரில் ஒரு சர்ச்சையான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில் ‘சபரிமலையின் தந்திரியாக பாதிரியார் ப்ரான்கோ மூலக்கல்லை நியமித்து விட்டால் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கூட சபரிமலைக்கு வர பயந்துவிடுவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் அவர் குறிப்பிட்டுள்ள பாதிரியார் பிரான்கோ மூலக்கல் சமீபத்தில் பாலியல் சர்ச்சைகளில் சிக்கி சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.