செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (08:01 IST)

அடங்காத எஸ்.வி.சேகர்: சபரிமலை விவகாரத்தில் நடிகர் கமலை வம்பிழுப்பு

சபரிமலை விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனின் கருத்தை கிண்டலடிக்கும் விதமாக எஸ்.வி சேகர் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
 
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலுக்குள் செல்ல முற்பட்ட பெண்களை தடுத்து நிறுத்தியும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், இதுவரை நான் சபரிமலைக்கு செல்லாததால், அதைப்பற்றி என்னால் கருத்து கூற இயலாது என கூறினார்.
 
இந்நிலையில் கமலின் இந்த கருத்தை கிண்டலடிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ள எஸ்.வி,சேகர் கமல் கூறிய கருத்தோடு, தசாவதாரம் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு கமலை கிண்டலடித்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், எஸ்.வி.சேகரை கண்டமேனிக்கு கிண்டலடித்து வருகின்றனர்.