5 சவரனுக்கு மேற்பட்ட நகைக்கடன்: உடனடியாக வசூலிக்க உத்தரவு!
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் வாங்கியவர்களுக்கு வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால் அதே நேரத்தில் ஐந்து சவரன் நகை கடன் வாங்கிய அனைவருக்கும் தள்ளுபடி சலுகை கிடைக்காது என்றும் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் 5 சவரனுக்கு மேல் கடன் வாங்கிய அனைவரிடமும் இருந்து உடனடியாக கடனை வசூலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு மண்டல மேலாளர் இயக்குனருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஐந்து சவரனுக்கு மேல் கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற கடன்களை உடனடியாக வசூலிக்க வேண்டும் என்றும் நகை கடன் தவணை இருப்பின் சட்டபூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி கடன் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அந்த ஆணையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது