செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified வியாழன், 24 நவம்பர் 2022 (16:28 IST)

ஆன்லைன் ரம்மி தடைமசோதா :அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்

RN Ravi
ஆன்லைன் ரம்மி தடைமசோதா குறித்து விளக்கம் கேட்டு, ஆளுனர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார்.
 

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு,  பண நெருக்கடியால், உயிரை மாய்த்துக் கொள்ளுவது அதிகரித்து வந்த நிலையில்,இதற்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.
இதையடுத்து, கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தமிழ் நாடு சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை நிறைவேற்றியது.

இதன்படி, ஆன்லைன் ரம்மி விளையயாடினால், மாதங்கள் சிறை அல்லது 5000 ரூபாய் அபராதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை அல்லது 5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் ஆன்லைன் விளையாட்டை அளிக்கும் நிறுவனத்தை நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது 10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என அறிவித்தது.


இந்த  நிலையில், ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து, விளக்கம் கேட்டு, தமிழக அரசிற்கு இன்று ஆளுனர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார். இந்த சட்ட மசோதாவின் காலம் வரும் நவம்பர் 27 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj