1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2023 (15:51 IST)

சிறைக்கைதிகள் விடுதலை விவகாரம்: 31 கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி..!

சிறைக்கைதிகள்  விவகாரத்தில் 31 கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.  
 
சிறைக்கைதிகள்   விடுதலை தொடர்பான விவகாரத்தில் 71  கோப்புகளில் 31 கோப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு விடுதலை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 39 கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்களின் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மீது வழக்கு பதிவு நடவடிக்கை தொடர்பான கோப்புகளையும் கூடுதல் ஆவணம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
ஏற்கனவே பல்கலைக்கழக வேந்தர் குறித்த கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran