வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (08:29 IST)

ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் நீட் விலக்கு மசோதா! – ஆளுனர் திடீர் முடிவு?

தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுனர் குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்திற்கு நீட் மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக சட்டமன்றம் மசோதா நிறைவேற்றி ஆளுனர் ஒப்புதலுக்கு அளித்தது. ஆனால் ஆளுனர் தரப்பில் மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

இதனால் சமீபத்தில் ஆளுனர் மாளிகையில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில் ஆளுனர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழக சட்டமன்றத்திற்கு அவர் தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.