4 மாவட்டங்களுக்கு மிக கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டிணம், திருவாரூர், வேதாடண்யம் உள்ளிட்ட பகுதிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், வேதாரண்யம் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், விருதுநகர், தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.