வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 17 ஜூன் 2023 (22:14 IST)

செந்தில்பாலாஜியின் துறைகளை வேறு 2 அமைச்சர்களுக்கு மாற்ற ஆளுநர் ஒப்புதல்

செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதற்கு ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த  நிலையில்,  செந்தில் பாலாஜி மீது வழக்கு உள்ளதால் அவர் அமைச்சராகத் தொடரக் கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் கூறப்பட்டுள்ளது பற்றி தமிழக அமைச்சர் பொன்முடி நேற்று விளக்கம் அளித்திருந்தார்.

அதில், மத்திய பாஜக  அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் மீது வழக்குள் உள்ளன. அவர்களை பதவி  நீக்க கோருவாரா என்று அமைச்சர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு மாற்றி ஒதுக்கி முதல்வர் பரிந்துரை செய்ததற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இருப்பினும் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதற்கு ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.