புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 அக்டோபர் 2022 (14:04 IST)

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுவது எப்போது? அமைச்சர் முத்துசாமி தகவல்

kilambakkam
சென்னை அருகே கிளாம்பாக்கம் என்ற பகுதியில் பிரமாண்டமான பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படுவது எப்போது என்பது குறித்த தகவலை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 
 
தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துக்காக சென்னை அருகே கிளாம்பாக்கம் என்ற பகுதியில் பிரமாண்டமான பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ரூபாய் 400 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பேருந்து நிலையத்தில் கட்டிட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்
 
இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran