இந்து கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும்: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ
இந்து கோயில்களில் இருந்து அரசு உடனே வெளியேற வேண்டும் என கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற அரசுக்கு மத விவகாரங்களில் கோயில் விவகாரங்களை தலையிட உரிமையில்லை என்று கூறிய வானதிசீனிவாசன் அனைத்தையும் மீறி இந்து கோயில்களை மட்டுமே திமுக அரசு ஆக்கிரமத்து வைத்து உள்ளது என்று தெரிவித்தார்.
மதச்சார்பின்மையை காக்க, இந்து கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்றும் இந்துக்களுக்கு வழிபாட்டு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திமுக அரசு கோவில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பிரதமர் மோடி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva