Daily Horoscope
✕

அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் சேவை இன்று முதல் தொடக்கம்

Written By Mahendran
Updated: புதன், 3 ஆகஸ்ட் 2022 (11:48 IST)
அரசு பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் விரைவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்த நிலையில் இன்று முதல் அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதல்கட்டமாக மதுரை, திருச்சி , கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து அரசு பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் சேவை தொடங்கப்படுகிறது என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
இந்த அரசு பேருந்துகளில் பொதுமக்கள் தினசரி மற்றும் மாத வாடகை மூலம் பார்சல் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதற்காகவே நியாயமான கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தனியார் நிறுவனங்களின் லாரிகளில் தான் பார்சல்கள் அனுப்பப்பட்டு வரும் நிலையில் இனி, அரசு பேருந்துகளில் குறைந்த கட்டணத்தில் அனுப்பிக் கொள்ளலாம் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments