புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 மார்ச் 2022 (16:05 IST)

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதா? இல்லையா? அமைச்சர்களின் இருவேறு கருத்துக்கள்!

கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் அமலில் இருந்த தாலிக்கு தங்கம் என்ற திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டத்தை கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதாக பட்ஜெட்டில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்
 
ஆனால் அதே நேரத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறும்போது தாலிக்கு தங்கம் திட்டத்தில் பிழையுள்ளதால காலத்திற்கு ஏற்ப அதை மாற்றி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்
 
இரு அமைச்சர்களின் இரு வேறு கருத்துக்களால் தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதாக இல்லையா என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.