Daily Horoscope
✕

தங்கம் விலை தொடர்ந்து சரிவு

Written By Sinoj
Updated: வெள்ளி, 18 ஜூன் 2021 (18:53 IST)
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதற்கிடையே  சில நாட்களாகத்  தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

கொரொனா இரண்டாம் அலைத் தொற்று உலகில் முழுவதும் பரவி வருகிறது. பொருளாதர ஸ்திரமின்மையால் பெரும்பாலான நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள், அமெரிக்க டாலர்கள், எண்ணெய் நிறுவனங்களில், கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வதைவிட தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வந்தனர். இதனால் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் சில நாட்களாகத் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.நேற்று சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ.616 குறைந்தது ஒரு சவரன் ரூ 36,000க்கு விற்பனை ஆனது.

இந்நிலையில், இன்று, காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360  குறைந்து, சவரன் ரூ.35,640 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ45 குறைந்து  ரூ.4,455 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

எல்லாம் காட்டு

புதுசா டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது!.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை!.. தவெக மீது அவதூறு.. 20 பேர் மீது வழக்குப்பதிவு...

கிளீனர் போனை வாங்கி பேசிய நிஷாந்த்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?..

அன்பில் மகேஷுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. நீதிமன்றம் உத்தரவு...

சினிமா வேற.. அரசியல் வேற.. மக்கள் ஏமாந்து போறாங்க.. விஜயை அட்டாக் செய்த நெப்போலியன்..

அடுத்த கட்டுரையில்
Show comments