1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chief Minister Stalin's important advice tomorrow

முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை...

stalin
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு அதிகரித்த நிலையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் முன்னெடுப்புகளால் சமீப காலமாக குறைந்துள்ளது.

இந்தக் கொரொனா தொற்றிற்கு சாதாரண மக்கள் முதல், அரசியல்தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும்  கொரொனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தினமும் கொரொனா இரண்டாம் தொற்றால் பாதிப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. ஏற்கனவே, கொரொனா பாதிப்பு அதிகமுள்ள திருப்பூர்,கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர்த்து,  27 மாவட்டங்களில் சில தளர்களுடன் கூடிய ஊரடங்கு உள்ளது.

.இநிந்லையில், 21 ஆம் தேதியுடன் தற்போதைய ஊரடங்கு முடியவுள்ளதால் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இதில்  மேலும் நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி  சில தளர்வுகள் அளிப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
 
அடுத்த கட்டுரையில்
நெல்லையில் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடும் பொது மக்கள்!