தங்கத்தின் விலை குறைவு…மக்கள் மகிழ்ச்சி
கொரொனா காலத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் தங்க்கத்தின் மீது முதலீடு செய்து வந்ததன் காரணமாக அனைத்து நாடுகளிலும் தங்கத்தின் விலை அதிகரித்தது.
இந்நிலையில் சமீப நாட்களாக தங்கத்தின் விலை குறைந்துவரும் நிலையில்,இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது.
ஒரு கிராம் தங்கம் ரூ.17 குறைந்து ரூ.4536 க்கும் ஒரு சவரன் ரூ.36,288 க்கும் விற்கபப்டுகிறது. வெள்ளி ரூ.65.70 க்கு விற்கப்படுகிறது.