முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கம் : குழப்பிய பன்னீர் செல்வம்
தேனி மாவட்டத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகளூக்கான இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற துணைமுதல்வர் பன்னீர் செல்வம் மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
’மாணவர்களுக்குள் மதிப்பெண் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும் போது அதிகமான தற்கொலை எண்ணங்கள் உண்டாவதை அடுத்து பொதுத்தேர்வு முடிவுகல் அறிவிக்கும் பொழுது முதல் மூன்று இடங்கள் அறிவிக்க மாட்டோம் என தமிழக அரசு அறிவித்தது. தமிழக கல்வியாளர்களும் அரசின் இம்முடிவை பெரிதும் வரவேற்றனர்.
இந்நிலையில் வரும் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என அறிவித்தார்.’
பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் அறிவிக்க மாட்டாது என தமிழ அரசு அறிவித்துள்ள நிலையில் இன்று துணைமுதல்வர் மூன்று இடங்கள் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என கூறியுள்ளது ஆசிரியர்களையும் அதிகாரிகளையும் மாணவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துயுள்ளது.