புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 21 ஜூலை 2021 (10:44 IST)

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு: பொதுமக்கள் மகிழ்ச்சி

தங்கம் விலை கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
சென்னையில் இன்று தங்கம் ஒரு கிராம் விலை ரூபாய் 4530.00 என்றும் ஒரு சவரன் விலை ரூபாய் என்றும் விற்பனையாகி வருகிறது அதே போல் 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் விலை ரூபாய் என்றும் ஒரு சவரன் விலை ரூபாய் ரூ.36240.00  என்றும் விற்பனையாகி வருகிறது. இதனையடுத்து நேற்றைய விலையை தங்கம் ஒரு கிராம் ரூ.14ம், ஒரு சவரன் ரூ.112ம் குறைந்துள்ளது.
 
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளதை அடுத்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.71.80 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71500.00 என்றும் விற்பனையாகி வருகிறது 
 
தங்கத்தின் விலை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் ஆனால் நீண்ட கால முதலீட்டிற்கு தங்கம் மிக சிறந்த முதலீடு என்று தங்க நகை வியாபாரிகள் கூறுகிறார்கள் 
 
மேலும் இது ஆடி மாதம் என்பதால் தங்கத்தின் விற்பனை சற்று சரிந்து உள்ளதாகவும் ஆனால் இம்மாத இறுதியில் மற்றும் அல்லது அடுத்த மாதம் தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்