வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (11:32 IST)

மிட்நைட்டில் ஆபாச படங்கள்: காப்பகத்தில் நடந்தேறிய அவலங்கள்; அல்லல்பட்ட சிறுமிகள்

திருவண்ணாமலையில் காப்பகம் ஒன்றில் சிறுமிகளை அந்த காப்பகத்தின் நிர்வாகியே வாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் ரமணா நகரில் கடந்த 15 ஆண்டுகளாக அருணை குழந்தைகள் விடுதி செயல்பட்டு வந்தது. இதில் 15 பெண் குழந்தைகள் தங்கி படித்து வந்தனர்.
 
இந்நிலையில் அந்த காப்பகத்திற்கு திடீரென அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அதிகாரிகள் சிறுமிகளை தனியே அழைத்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் அம்பலமானது. தினமும் நள்ளிரவு அந்த காப்பகத்தின் நிர்வாகி வினோத்குமார், டிவியில் ஆபாச படங்களை போட்டுவிட்டு அதனை பார்க்குமாறு எங்களை வற்புறுத்துவார். இதற்கு அவரது மனைவியும் உடந்தை என பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
 
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன அதிகாரிகள் உடனடியாக சிறுமிகளை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர். நிர்வாகி வினோத்குமாரை கைது செய்த போலீஸார் அவனிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.