1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2023 (14:27 IST)

காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

dead
தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன் ஒருவனின் கொடும் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது தீயில் கருகிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 திருப்பூர் மாவட்டம் பல்லடம் என்ற பகுதியைச் சேர்ந்த லோகேஷ் சென்ற இளைஞர் பூஜா என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி பூஜாவை லோகேஷ் வலியுறுத்திய நிலையில் பூஜா திருமணத்திற்கு மறுத்ததால் திடீரென அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார்
 
80 சதவீத தீக்காயங்களுடன் பூஜா திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து லோகேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva