கணவனை திருத்த நினைத்து உயிரை விட்ட இளம்பெண் – திருமுல்லைவாயிலில் சோகம்
தன் கணவனை மிரட்டுவதற்காக தீக்குள்ளிக்க முயன்ற இளம்பெண் உண்மையாகவே தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவரும் மதுரவாயல் பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயத்தை பெற்றோருக்கு தெரிவித்து அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.
வினோத் குமாருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதனால் அடிக்கடி இரவு நேரங்களில் குடித்து விட்டு வந்து சச்சரவில் ஈடுபட்டு வந்துள்ளார். பொறுமையிழந்த அனிதா உடலில் எண்ணெயை ஊற்றி கொண்டு கணவரை மிரட்டியுள்ளார். அப்போது தவறுதலாக உடலில் தீப்பற்றியது.
உடனடியாக அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அனிதா உயிரிழந்தார். தனது கணவரை திருத்த விளையாட்டாக செய்த செயல் அவர் உயிரையே பறித்துவிட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.