புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (13:15 IST)

புதிய வானம் புதிய பூமி – ட்விட்டரில் கூத்தாடும் தமிழக பாஜக

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்படும் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதை பல கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் அதை ஆதரித்து ட்விட்டரில் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளது தமிழக பாஜக.

ஜம்மு கஷ்மீருக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்யும் மத்திய அரசின் பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. 1947ல் இந்தியாவில் சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்திய மாகாணங்களை ஒன்றினைத்து புதிய இந்தியா உருவாக்கப்பட்டது. ஆனால் காஷ்மீர் மட்டும் இந்தியாவுக்கா பாகிஸ்தானுக்கா என்ற சிக்கல் ஏற்பட்டது. அப்போது பிரதமராக இருந்த நேரு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துகள் அளித்து நிலைமையை சீர் செய்தார்.

அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக “நேருவின் வரலாற்று பிழையை சரிசெய்து காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் இணைத்துள்ளார் பிரதமர் மோடி” என பதிவிட்டு, அதற்கு கீழே “புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளையும் இணைத்துள்ளது.