1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:35 IST)

மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது: காயத்ரி ரகுராம்

திமுக பொதுக்குழு நேற்று காணொளி மூலம் நடைபெற்ற போது இந்த பொதுக்குழுவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை முதல்வர் நாற்காலியில் அமர்த்தி தீருவோம் என்று திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் சூளுரைத்த்தனர் என்பது தெரிந்ததே. இன்னும் எட்டு மாதத்தில் ஆட்சி மாறிவிடும் என்றும் திமுக ஆட்சி கட்டிலில் உட்காரும் என்றும் திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அவர்களும் நம்பிக்கை தெரிவித்தார்.
 
திமுகவினரின் இந்த செயலுக்கு அதிமுக அமைச்சர்கள் ஏற்கனவே பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. எட்டு மாதங்கள் என்ன, எத்தனை மாதங்கள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வராது, ஸ்டாலின் முதல்வராக மாட்டார் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் தற்போது இது குறித்து பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனது கருத்தை தெரிவித்துள்ளார் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் தான் தான் என்று முக ஸ்டாலின் கனவு கண்டு கொண்டு இருக்கிறார் என்றும் அந்த கனவு பலிக்காது என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். காயத்ரி ரகுராம் இந்த கருத்துக்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது