ஸ்டாலின் மீது பரிதாப்பப்படும் ஜெயகுமார்!!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 10 செப்டம்பர் 2020 (10:43 IST)
ஸ்டாலினை திருப்திபடுத்த கொடுத்த பில்டப்தான் முதல்வர் நாற்காலியில் அமரவைப்போம் என்பது என ஜெயகுமார் நக்கல். 
 
திமுக பொதுக்குழு கூடியவுடன் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் மற்றும் டிஆர் பாலு ஆகிய இருவரும் தங்களுக்கான பதவியை ஏற்றுக்கொண்டனர். 
 
இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் எப்போது நடந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்றும், வேதனை மிகுந்த அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என பேசினார். 
 
இது குறித்து அதிமுக அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்தார். அப்போது அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் போதுமா? மக்கள் மனதில் என்ன தீர்மானம் இருக்கிறது என்று பார்க்கவேண்டாவா? 
 
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் தீர்மானம். ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொருவரையும் திருப்திபடுத்த ஒரு தீர்மானம் போடுவார்கள். அதே போல ஸ்டாலினை திருப்திபடுத்த கொடுத்த பில்டப்தான் முதல்வர் நாற்காலியில் அமரவைப்போம் என்பது என பேசினார். 
 
மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டப்படி முடிவெடுக்கப்பட்டு விரைவில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :