1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (16:00 IST)

கோர விபத்தை ஏற்படுத்திய பரங்கிமலை ரயில் நிலைய தடுப்புச் சுவர் இடிப்பு

சமீபத்தில் சென்னை பரங்கிமலையில் ரயில் நிலையத்தில் விபத்து ஏற்பட்டு பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டது.

 
கடந்த மாதம் 24ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் தொங்கிக் கொண்டு பயணித்த சிலர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவம் சென்னை பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததன் காரணமாக கூட்ட நெரிசல் அதிகளவில் இருந்தது. வழக்கமாக செல்லும் பாதையை விட்டு விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் மின்சார ரயில் சென்றது.
 
இதுவே விபத்து ஏற்பட முக்கிய காரணம். விபத்து ஏற்பட காரணமாய் இருந்த தடுப்புச் சுவர் இடிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் உள்பட பலரின் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் அந்த தடுப்புச் சுவரை இடிக்க உத்தரவு பிறப்பித்தார்.
 
அதன்படி பரங்கிமலை ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் இருந்த அந்த தடுப்புச் சுவர் இடிக்கப்பட்டது.