திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: புதன், 1 ஆகஸ்ட் 2018 (15:01 IST)

வடசென்னை டிரைலரை வியந்து பாராட்டிய ஷாருக்கான்

தனுஷின் வடசென்னை டீசர் விறுவிறுப்பையும் ஆர்வத்தையும் தூண்டும் விதமாக உள்ளது என ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வட சென்னை திரைப்படம் வெளியாக உள்ளது. அதில் சமுத்திரகனி, கிஷோர், டேனியல் பாலாஜி, அமீர், ராதாரவி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் உள்ளிட்ட  பலர் நடித்துள்ளனர்.
 
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தொடர்ந்து வெளியாகவுள்ள இப்படத்தின் டீசரை தனுஷின் பிறந்த நாளன்று படக்குழுவினர் வெளியிட்டனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டீசரை இதுவரை 4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
 
இந்நிலையில் வடசென்னை டீசர் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் ஷாரூக்கான், எனது நண்பரும் பன்முகத்திறமை கொண்ட தனுஷின் புதிய பட டீசர் விறுவிறுப்பையும் ஆர்வத்தையும் தூண்டக்கூடிய விதத்தில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.