வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து மூதாட்டியிடம் நகைக் கொள்ளை!

மருத்துவமனைக்கு செல்வதற்காக காத்திருந்த மூதாட்டியை காரில் அழைத்து செல்வதாக சொல்லி ஒரு கும்பல் நகையைக் கொள்ளையடித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி அலமேலு. இவர் மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக பஸ்ஸுக்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த கும்பல் தாங்களும் அங்குதான் செல்வதாக சொல்லிய பின்னர் அவரைக் காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

காரில் சென்ற போது குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து அவரை மயக்கமடையச் செய்து அவரிடம் இருந்த 6 பவுன் நகையை திருடிவிட்டு அவரை சாலையிலேயே விட்டு சென்றுள்ளனர். சுய நினைவு திரும்பிய அலமேலு உறவினர்களை தொடர்புகொண்டுள்ளார். இதையடுத்து அவரின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலிஸார் வந்தவாசி அருகே வாகனை சோதனையின் போது அந்த காரையும் அதில் இருந்தவர்களையும் பிடித்துள்ளனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.