திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (15:50 IST)

தோல் பூஞ்சை நோய்...மருத்துவர் தகவல்

கருப்பு, வெள்ளை, மஞ்சை பூஞ்சை நோய்கள் ஏற்கனவே நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மேலும் அதிர்ச்சி தரும் விதமாக இந்தியாவில் முதன் முதலாக தோல் பூஞ்சை  கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதவது: தோல் பூஞ்சை நோயை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது அதிக நோய்த் தொற்றை ஏற்படுத்தாது எனவும் இது குறித்து மக்கள் தேவையின்றி அச்சப்பட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.