1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (07:47 IST)

9, 11ஆம் வகுப்புகள் இன்று தொடக்கம்: பெற்றோர் ஒப்புதல் கடிதத்துடன் வரவேண்டும்!

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
 
இந்த நிலையில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் தொடங்கும் என ஏற்கனவே தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்குகின்றன.
 
மேலும் மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்துடன் வருமாறு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் வகுப்பறையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது