ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (09:07 IST)

வெங்காயத்தால் களைகட்டிய திருமணம் !

கடலூரில் நடந்த திருமணம் ஒன்றில் மணமக்களுக்கு நண்பர்கள் வெங்காயத்தில் செய்த பொக்கே ஒன்றை பரிசளித்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

கனமழைக் காரணமாக வெங்காய விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் வெங்காயம் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.

தட்டுப்பாட்டால் சில இடங்களில் வெங்காயம் திருடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுபோல வித்தியாசமான சம்பவங்கள் வெங்காயத்தை மையப்படுத்தி நடந்துவரும் சூழ்நிலையில் கடலூரில்நடந்த திருமணம் ஒன்று மேலும் கவனம் ஈர்த்துள்ளது.

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் நடந்த சப்ரீனா, ஷாகுல் தம்பதிகளின் திருமண நிகழ்வில் ஷாகுலின் நண்பரகள் மணமக்களுகு வெங்காய பொக்கே ஒன்றை அன்பளிப்பாக அளித்து நிகழ்வைக் கலகலப்பாக்கியுள்ளனர். இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் இப்போது வைரலாகப் பரவி வருகிறது.